Type Here to Get Search Results !

பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டது.... மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

 லோக்சபா தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படும் ஜூன் 4-ம் தேதி பாஜகவின் வெற்றி உறுதி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் பிரசாரம் செய்த அவர், பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் ஒரு பக்கம் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த மோடியும், மறுபுறம் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த இரண்டு இளவரசர்களும் போட்டியிடுகிறார்கள் என்று ராகுல் காந்தியையும், அகிலேஷ் யாதவையும் மறைமுகமாக விமர்சித்தார் அமித் ஷா.

பின்னர் சீலம்பூரில் பிரசாரம் செய்த அவர், இந்தத் தேர்தல் ராமர்களை சுட்டுக் கொன்றவர்களுக்கும் ராமருக்கு கோயில் கட்டியவர்களுக்கும் இடையேயான போர் என்று குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.