நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி கன்யாகுமரி வருகிறார். அங்குள்ள பாறையில் 3 நாட்கள் விவேகானந்தர் தியானம் செய்கிறார்.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்கிறது.தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும்.
இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 30ம் தேதி கன்யாகுமரி வருகிறார். டெல்லியில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்யாகுமரி சென்றடைகிறார்.
பின்னர் நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்லும் பிரதமர் மோடி, அன்று மாலை முதல் ஜூன் 1-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்யாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக கேதார்நாத் பயணம்: கடந்த 2019 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. கடைசி கட்ட வாக்குப்பதிவு கடந்த மே 19ம் தேதி நடந்தது.மே 17ம் தேதியுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பல தலைவர்கள் ஓய்வெடுக்க தொடங்கினர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அவர் சாம்பல் நிற ஆடையும், இடுப்பில் காவி துணியும், தலையில் உத்தரகாண்ட் பாரம்பரிய தொப்பியும் அணிந்திருந்தார். ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து கேதார்நாத் கோயிலை அடைந்து அரை மணி நேரம் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பிரதமர் கொண்டு வந்த சிறப்பு அங்கிகள் சிவலிங்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
அதன் பிறகு கேதார்நாத்தில் உள்ள குகையில் 17 மணி நேரம் தொடர்ந்து தியானம் செய்தார். அவர் தங்கியிருந்த அறையில் மின்சாரம் இல்லை. ஒரே ஒரு படுக்கைதான் இருந்தது. செல்போன் நெட்வொர்க் செயலிழந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி கன்யாகுமரிக்கு தியானம் செய்ய வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


AthibAn Tv