Type Here to Get Search Results !

பாரத் நெட் என்ற 'இன்டர்நெட்' திட்ட டெண்டரை மத்திய வர்த்தக அமைச்சகம் ரத்து செய்தது



 தமிழகத்தில் கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் வசதி தருவதற்காக கொண்டு வரப்பட்ட பாரத் நெட் என்ற 'இன்டர்நெட்' திட்ட டெண்டரை மத்திய வர்த்தக அமைச்சகம் ரத்து செய்தது. டெண்டரில் விதிகளை முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி, டெண்டரை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரூ.1,950 கோடியில் 12, 524 கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் இணைப்பு தர பாரத் நெட் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் கருவிகள் கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட்டதில் விதிகள் மீறப்பட்டதாகவும், கருவிகளுக்கான டெண்டரில் உள்ள குறைகளை களைந்து மறு டெண்டர் விடுமாறும் மத்திய அரசு உத்தரரவிட்டுள்ளது.

பாரத்நெட் திட்டத்தில், தமிழகத்தில் டெண்டர் தொடர்பாக ஒரு சில நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், கட்சிகளும் புகார் கூறின. இது குறித்து தமிழக அரசும் விளக்கமளித்தது. இந்த விளக்கத்தை ஏற்காத மத்திய அரசு டெண்டரை ரத்து செய்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.