Type Here to Get Search Results !

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை

Minister Sengottaiyan About 12th Result | 12 board exams

தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் அடுத்த குமாரபாளையத்தில், ரோட்டரி அறக்கட்டளை சார்பில் 3 கோடியே 82 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கொரோனா தடுப்பு பணிக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பள்ளிகளுக்கு மேசை, இருக்கைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இப்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பதற்கு சாத்திய கூறுகள் இல்லை என்றும், அதே  நேரத்தில் சூழ்நிலை மாறும் போது  கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அமைச்சர்களுடன் கலந்து பேசி எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.