Type Here to Get Search Results !

சீன வீரர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி மோதி கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது

சிக்கிமில் இந்திய - சீன வீரர்கள் ...

லடாக்கை தொடர்ந்து சிக்கிமின் பனிப்படர்ந்த உயர்ந்த சிகரத்தில் இந்திய, சீன வீரர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி மோதி கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

மொபைல் போனில் எடுக்கப்பட்ட சுமார் 5 நிமிடங்கள் வரை ஓடும் வீடியோவில், சீன ராணுவ அதிகாரி ஒருவரை, இந்திய வீரர்கள் முகத்தில் குத்துவிடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இருநாட்டு ராணுவ வீரர்களும் வாக்குவாதம் செய்து கொண்டே கைகலப்பில் ஈடுபடுகின்றனர். இருதரப்பிலும் இருந்து 'திரும்ப போ, சண்டையிடாதே' என மற்ற வீரர்கள் கோஷமிடுகின்றனர்.

பனி படர்ந்த இடத்தில் ஒருவருடன் மற்றொருவர் கூச்சலிட்டப்படி கைகளால் தாக்கி மோதி கொள்கின்றனர். சில நிமிடங்களுக்கு பிறகு, தாக்குதலுக்கு உள்ளான சீன வீரரிடம், இந்திய ராணுவ அதிகாரி நலம் விசாரிப்பதோடு முடிகிறது.

இந்த மோதல் எப்போது நடைபெற்றது என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை. கல்வான் பள்ளதாக்கில் நடந்த மோதல் தொடர்பாக இந்தியா - சீன ராணுவ உயரதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக்கில் சீன எல்லையில் உள்ள மோல்டோவில் லெப்டினன்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கடந்த ஜூன் 6ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின் போது, படைகளை பழைய நிலைக்கே திரும்ப இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் ஒப்புகொண்டனர். சமீபத்தில், காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதில், சீன வீரர்கள் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். 45 சீன வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இருநாட்டு ராணுவம் இடையே ஏற்பட்ட மோசமான எல்லை மோதலை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு வரை நடந்த பேச்சுவார்த்தையில், எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை குறைப்பது, எல்லையில் அமைதிக்கான ஒப்பந்தத்தை சீனா மதிக்க வேண்டுமென இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.