Type Here to Get Search Results !

தீவிர கொரோனா உள்ள நபர்களுக்கு, டெக்சாமெதாசோன் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

Dexamethasone and the Recovery Trial's High-Speed Science | WIRED

மிதமான மற்றும் தீவிர கொரோனா அறிகுறி காணப்படும் நபர்களுக்கு, டெக்சாமெதாசோன் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மருந்து கொரோனாவால் மிகவும் பாதித்தவர்களை குணப்படுத்தும் தன்மை, இந்த மருந்துக்கு உள்ளது என பிரிட்டனில் நடந்த பல்வேறு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. வீக்கம், கட்டிகளை குணப்படுத்துவதற்காக பயன்படும் இந்த மருந்து கடந்த 60 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்ட நபருக்கு கொடுத்து பரிசோதனை செய்த போது, இறப்பு வீதம் 35 சதவீதம் குறைந்ததாக தெரியவந்துள்ளதாக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு கழக நிபுணர் குழு தெரிவித்தது.

இந்நிலையில், மிதமான மற்றும் தீவிரமாக அறிகுறி உள்ளவர்களுக்கு இந்த மருந்தை வழங்க மத்திய அரசு அனுமதிவழங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தேவையுடன் சிகிச்சை பெறுவோர் அல்லது அதைவிட பாதிக்கப்பட்டோருக்கு டெக்சாமேதாசோன் மருந்து வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.