Type Here to Get Search Results !

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் முகாம்

UnmaskingChina: கல்வான் பாலத்தை கட்டி ...

எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது என, முடிவு செய்யப்பட்ட போதிலும், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் தொடர்ந்து முகாமிட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.லடாக்கில் உள்ள கல்வான் நதி தான், இந்தியா மற்றும் சீனா இடையேயான, எல்.ஏ.சி., எனப்படும் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியாக கருதப்பட்டு வந்தது. நதியை ஒட்டி, லடாக்கில் உள்ள பள்ளத்தாக்கு பகுதி, இந்தியாவுக்கும், நதிக்கு மறுபக்கம் உள்ள பகுதி சீனாவுக்கும் சொந்தமானது என, நீண்டகாலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நதியைத் தாண்டி, லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து முகாமிட்டது. அதை நம் படைகள் தடுத்து நிறுத்தின.கடந்த, ஏழு வாரங்களாக இரு படைகளும் அங்கு முகாமிட்டுள்ளன. இந்நிலையில், 15ம் தேதி இரவில், இரு படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில், நம் ராணுவத்தின், 20 வீரர்கள் உயிரிழந்தனர்.தொடர்ந்து நடந்து வந்த பேச்சுவார்த்தைகளில், எல்லையில் இருந்து, இரு ராணுவமும் தங்களது படைகளை விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால், இரண்டு நாட்களாகியும், படைகள் விலக்கி கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், 'சாட்டிலைட்' படங்களை மேற்கோள்காட்டி, எல்லையில் உள்ள நிலவரம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவ வீரர்கள் முகாமிட்டு உள்ளது தெரிகிறது.மே, 22ல் எடுக்கப்பட்ட படங்களில், சீன வீரர்கள் வெள்ளை நிற டென்ட்கள் அமைத்திருந்தனர். தற் போது, அங்கு, வீரர்கள் தங்குவதற்கான கட்டட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.இதைத் தவிர, அந்தப் பகுதியில், தார்ச் சாலைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. கல்வான் நதியின் இரு பக்கங்களிலும் சீன ராணுவம் பல்வேறு கட்டு மானப் பணிகளில் ஈடுபட்டுள்ளதும், படங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்தப் படங்கள் குறித்து, மத்திய அரசோ, ராணுவமோ எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.விளக்கினார் ராணுவ தளபதிஎல்லையில் உள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக, ராணுவ தலைமை தளபதி, எம்.எம்.நரவானே, இரண்டு நாள் பயணமாக, லடாக் சென்றிருந்தார்.அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தார்.மத்திய அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், எல்லை நிலவரம் குறித்து ராணுவ தலைமை தளபதி விளக்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.