Type Here to Get Search Results !

முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மாநில முதல்வர் எடியூரப்பா திட்டவட்டம்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல் ...

பெங்களூருவில் முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மாநில முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் அதை கட்டுப்படுத்த 20 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆளும் பா.ஜ., அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனிடையே எடியூரப்பா, பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தாமல் இருக்க மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் அங்கு ஊரடங்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. ஆனால், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதனால் மீண்டும் ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.