Type Here to Get Search Results !

லடாக்கில், சீன ராணுவத்தினரின் இடையூறுகளை மீறி, கல்வான் ஆற்றில், இந்திய ராணுவம், புதிய பாலத்தை கட்டி முடித்துள்ளது.

China brings bulldozers in to Himalayan site of clash with India ...

இது குறித்து, ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:லடாக்கில், கல்வான் ஆற்றின் மீது குறுகலான நடைபாதை இருந்தது. இதை அகற்றி, 60 மீட்டர் பாலம் கட்டும் பணி, இரு தினங்களுக்கு முன் முடிவடைந்தது.கல்வான் பகுதியில், இந்திய - சீன ராணுவத்தினரின் மோதலுக்கு இடையிலும் பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று, முடிவடைந்துள்ளது.இதன் மூலம், இந்திய ராணுவம், கல்வான் ஆற்றைக் கடக்க முடியும். அத்துடன், தர்புக் - தவுலத் பெக் ஓல்டி வரையிலான, 255 கி.மீ., சாலையை பாதுகாக்கவும், காரகோரம் கணவாய்க்கு தெற்கே, கடைசியாக உள்ள ராணுவ முகாமுக்கு சுலபமாக செல்லவும் முடியும்.இந்தப் பாலம், ஷையோக் - கல்வான் ஆறுகள் சந்திப்பில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் உள்ளது. ராணுவத்தின், 14வது கண்காணிப்பு முகாம் அருகே உள்ள இந்த பகுதியில் தான், சீனா - இந்திய ராணுவத்தினரின் மோதல் நிகழ்ந்தது.

கல்வான் ஆற்றுப் பள்ளத்தாக்கை முழுவதுமாக கைப்பற்றி, இந்தியாவின் எல்லையை, ஷையோக் ஆற்றுடன் நிறுத்த வேண்டும் என்பது தான், சீனாவின் திட்டம். அப்படிச் செய்தால், அங்கிருக்கும் சாலையை சொந்தமாக்கி, தவுலத் பெக் ஓல்டி உடனான இணைப்பை துண்டிக்கலாம். அங்கிருந்து, முர்கோ வழியாக பாகிஸ்தானுக்கு சாலை அமைக்கலாம் என்பதும், சீனாவின் சமீபத்திய ஆக்ரமிப்பு திட்டத்திற்கு முக்கிய காரணம். தற்போது, கல்வான் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால், இந்திய ராணுவ வாகனங்கள் ஆற்றை கடக்கவும், பிற வழிகளில் சீன ராணுவம் வாலாட்டினால் தகுந்த பதிலடி கொடுக்கவும் முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.