Type Here to Get Search Results !

சீனாவுடன் இந்தியா கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது

Russia-India-China Trilateral Grouping: More than hype? | ORF

இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையேயான மோதலை தொடர்ந்து சீனாவுடன் இந்தியா கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவில், லடாக்கின் கல்வான் பகுதியில், நேற்று முன்தினம்(ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழியத் தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற சீன ராணுவத்துக்கு, நம் ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதல்களில், 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ரஷ்யா - இந்தியா - சீனா கலந்து கொள்ளவிருந்த ஆர்.ஐ.சி முத்தரப்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 22, 23ம் தேதியில், மூன்று நாடுகளை சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.