Type Here to Get Search Results !

இரு நாட்டு படைகளும் நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் : முன்னாள் இந்திய தூதர் கவுதம் பாம்பாவாலே

மே முதல் சீனா ஆக்கிரமிப்பு முயற்சி ...

மே மாதம் முதலே, சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, சீனாவுக்கான முன்னாள் இந்திய தூதர் கவுதம் பாம்பாவாலே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த மே மாதம் முதலே, இந்திய - சீன எல்லை பகுதியில், ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் சீன ராணுவம் முயன்று வருகிறது. இந்தியா இதனை எதிர்ப்பதுடன், சீன துருப்புகள் முன்னேறுவதையும் தடுத்து வருகிறது. இரு நாட்டு வீரர்களுக்கு இடையே, பல வாரங்களாக மோதல்கள் நடந்து வருகிறது.

இரு நாட்டு படைகளும், இவ்வாறு அருகருகே இருக்கும் போது, நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.