Type Here to Get Search Results !

இந்தியா - சீனா விவகாரத்ததில் சீன துாதரிடம் பகிர்ந்து கொள்ளவே, பிரதமரிடம் தகவல்களை ராகுல் கேட்டுள்ளார்

Rahul Gandhi questions PM Modi's silence on Chinese incursions ...

''இந்தியா - சீனா விவகாரத்ததில், காங்கிரஸ், எம்.பி., ராகுல், இணையான தகவல் தொடர்பு வைத்துள்ளார் என நினைக்கிறேன்,'' என, மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான, ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:இந்திய - சீனா எல்லைப் பிரச்னை தொடர்பான விபரங்களை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என, ராகுல், பிரதமரை கேட்டுள்ளார். அவர், சீனாவுக்கு சாதகமாக, தகவல் தொடர்பு வைத்துள்ளார் என, நினைக்கிறேன்.

அதனால், தான், டோக்லாம் பிரச்னையின் போது, ராகுல் சீன துாதரை சந்தித்துப் பேசினார். முதலில் மறுத்த அவர், பின் ஒப்புக் கொண்டார். 'சீன துாதர், பூடான் துாதர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த காங்., தலைவர்களை சந்தித்து, முக்கியமான தகவல்களை தெரிவித்தேன்' என, ராகுல், அப்போது ஒப்புக் கொண்டார்.

இப்போதும், எல்லை பதற்றம் தொடர்பான தகவல்களை சீன துாதரிடம் பகிர்ந்து கொள்ளவே, பிரதமரிடம் தகவல்களை ராகுல் கேட்டுள்ளார் என, நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.