
எல்லையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, சீனா பொருட்களை புறக்கணிப்போம் என எழுந்த பிரசாரத்தை, இந்தியா நிறுத்த வேண்டும் என சீன நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக குளோபல் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: சீன தயாரிப்புகளை புறக்கணிப்போம் சீனாவை பொருளாதார ரீதியில் புறக்கணிப்போம் என சிலர் தனிப்பட்ட முறையிலும், சில அமைப்புகளும் பிரசாரத்தில் ஈடுப்டுள்ளதாக இந்தியாவில் வெளியாகும் சில மீடியாக்கள் தெரிவித்துள்ளன. இதற்கு ஏராளமான ரசிகர்களை கொண்ட இந்திய பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் தங்களது சொந்த நலனுக்காக சீனா மீதான விரோதத்தை வளர்த்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு மிக குறைந்த ஆதரவாளர்களே உள்ளனர். இரு நாடுகளுக்கு இடையில் பிரச்னை ஏற்படும் போது எல்லாம், சீனாவை புறக்கணிப்போம் என சொல்லி வருகின்றனர்.
இந்த பிராந்தியத்தில் பெரிய பொருளாதாரத்துடன், ஆசியாவில் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடு பிரச்னையை ஏற்படுத்துவது பேராபத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முதலீடு மற்றும் வர்த்தகத்துடன் எல்லை பிரச்னையை தொடர்பு படுத்துவது சரியில்லாதது. தெற்காசியாவின் மிகப்பெரிய நாட்டில், பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள். சீனா எதிர்ப்பு குழுக்கள் மூலம், பிரிவினையை ஏற்படுத்தவும், எல்லை பிரச்னையை பெரிதுபடுத்தவும், பொருளாதார உறவுகளுக்கு இடையூறு ஏற்படுத்தவும் விரும்ப மாட்டார்கள்.
கொரோனா அச்சுறுத்தலால் உலக பொருளாதாரம் நிச்சயமற்றதாக உள்ளது. இந்த சூழ்நியைில், எல்லை பிரச்னைய வளர விட்டால் இந்தியா சீனாவிற்கு பொருளாதார வளரச்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உலகில் நிச்சயமற்ற தன்மை சூழ்நிலைகள் நிலவும் நிலையில், வளரும் நாடான, இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். நோய் தொற்று காலத்தில் வளரும் நாடுகளுக்கு பெரிய ஆபத்தை சந்திக்கும் நிலை உள்ளது.
எல்லை பிரச்னைகள் பெரிதானால், முதலீடுகள் வெளியேறும். பொருளாதார பிரச்னையில், இந்தியா, சீனா இடையில் ஒத்துழைப்புக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. இரு நாடுகளின் பொருளாதார பிரச்னைக்கும், பிரச்னைகளில் இருந்து வெளியே வரவும், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மிகப்பெரிய அளவில் உதவும். இதன் மூலம் தொற்றுநோய் பாதிப்பில் இருந்து வெளியே வர உதவுவதுடன், சர்வதேச மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கு மிகவும் உதவும். இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


AthibAn Tv