கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன எல்லையில் நடந்தததை விளக்கும் விதமாக செயற்கைகோள் வரைபடம் வெளியாகியுள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில், நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் உடல்கள் சொந்த ஊர்களில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை உயிரிழந்தவர்கள் குறித்து அந்நாட்டு அரசு, எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் மோதல் நடந்தது தொடர்பான செயற்கைக்கோள் வரைபடங்கள் வெளியாகியுள்ளது.

ராய்ட்டர்ஸ் வெளியிட்ட புதிய செயற்கைகோள் படங்கள் எல்லைபகுதியில் சீனப் பக்கத்தில் ஒரு பெரிய கட்டமைப்பை இருப்பதை காட்டுகிறது. இந்த மோதல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான நடைமுறை எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இருந்து சில கி.மீ தூரத்தில் உள்ள PP-14 அல்லது ரோந்து பகுதி 14 எனப்படும் ஒரு இடத்தில் நடந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து ராணுவ வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கிலுள்ள இந்தியாவின் பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம். இந்த 15,000 அடி உயர இமயமலை பகுதியில் தான் ஜூன் 15 அன்று நூற்றுக்கணக்கான வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
மோதலின் போது, இந்திய வீரர்கள் இரும்புக் கம்பிகளால், முட்கம்பிகளால் மூடப்பட்டிருந்த கற்களால் தாக்கப்பட்டுள்ளனர். பிற்பகல் தொடங்கிய இந்த மோதல் நள்ளிரவு வரை நீடித்துள்ளது. ராணுவ வீரர்கள் ஒரு உயரமான பாறைகளில் இருந்து பனிகட்டிகளுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதை கல்வான் நதி செயற்கைக்கோள் வரைபடங்கள் விளக்குகிறது. அதனை தொடர்ந்து, சீன ஆம்புலன்ஸ்கள் அப்பகுதியில் இருந்து காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வதை இந்திய வீரர்கள் கவனித்துள்ளனர். பின்னர் ஹெலிகாப்டர்கள் அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர்.

தவுலத் பெக் ஓல்டியில் இருந்து வடக்கு டார்பூக்குடன் தெற்கு நோக்கி இணையும் இந்தியாவின் புதிய சாலையை குறிவைத்தே சீன ராணுவ வீரர்கள் தாக்குதலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

AthibAn Tv