Type Here to Get Search Results !

தாத்தாவான அமித் ஷா, தன் பேத்தியை கையில் எடுத்து கொஞ்ச முடியவில்லை.

Home minister Amit Shah speaks to Delhi LG; requests him to call ...

உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, இரண்டாவது பேரக் குழந்தை பிறந்துள்ளது. தாத்தாவான அமித் ஷா, தன் பேத்தியை கையில் எடுத்து கொஞ்ச முடியவில்லை. அமித் ஷாவின் மகனுக்கு குழந்தை பிறந்தது, ஆமதாபாதில். அமித் ஷாவோ, டில்லியில் இருக்கிறார்.

ஊருக்கு சென்று பேத்தியைப் பார்க்க ஆசைப்பட்டார், அமித் ஷா. ஆனால், பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் அதிரடிப் படையின் தலைவர், 'நீங்கள் ஊருக்குப் போகக் கூடாது' என, அமித் ஷாவிற்கு கட்டளையிட்டு விட்டார். 'குஜராத்தில், குறிப்பாக ஆமதாபாதில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், பேரக்குழந்தையை பார்க்க, ஆமதாபாத் சென்றால், அமித் ஷாவிற்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

'தினமும் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசுபவர், அமித் ஷா. இதனால், பிரதமருக்கும் பிரச்னை ஏற்படும்' என, மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும், எஸ்.பி.ஜி., அமைப்பு கறாராக கூறிவிட்டது. இதனால், பேத்தி பாசத்தை, தற்போதைக்கு தள்ளி வைத்துள்ளார், அமித் ஷா. இருப்பினும், தினமும் காலையில், வீடியோ மூலமாக பேத்தியைப் பார்த்துவிட்டு தான், வேலைகளைத் துவங்குகிறாராம் அமித் ஷா.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.