
தமிழகத்தில் வெப்பச்சலனத்தின் காரணமாக 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் தென் மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக பெரும்பாலான பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நான்கு மாவட்டங்களில், கடும் வெயில் நிலவும்; நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய கோவை , நீலகிரக மற்றும் தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இம்மாவட்டத்தின் சில இடங்களில் கனமழையும் பெய்யலாம்.
தொடர்ந்து, ஈரோடு, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்கடி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில் சில இடங்களில் லேசாக மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 27 டிகிரி வரை வெப்பம் பதிவாகலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


AthibAn Tv