இந்தியா - சீனா எல்லையில் போர் நிலவும் சூழ்நிலை ஏற்பட்டதால், உலகிலேயே மிகவும் வலுவான, திறன்மிக்கதாகக் கருதப்படும், 'பீஷ்மா' என்று பெயரிடப்பட்டுள்ள பீரங்கிகளை, நம் ராணுவம் எல்லைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதுவே சீனாவின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்தவும், தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ளும் துருப்பு சீட்டாகவும், நம் ராணுவம் பயன்படுத்த உள்ளது.இந்தியா - சீனா இடையே, லடாக்கில், எல்லைப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இரு படைகளும் குவிக்கப்பட்டதால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டுஉள்ளது. சீனா தன் ராணுவத்தை நிறுத்தியதால், நம் ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டது. இதையடுத்து, போர் மூளும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது.
இந்நிலையில், பீஷ்மா என்று பெயரிடப்பட்டு உள்ள, 'டி - 90' பீரங்கிகளை, நம் ராணுவம் எல்லைக்கு அனுப்பியுள்ளது. உலகிலேயே மிகவும் வலுவான, தகர்க்க முடியாத பீரங்கி இதுவாகும்.
கடந்த மாத துவக்கத்திலேயே இந்த பீரங்கிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை ஏற்க மாட்டோம்; முன்னேறி வந்து தாக்குதல் நடத்தினால், தகுந்த பதிலடி கொடுப்போம் என்பதை உணர்த்தும் வகையில், இந்த பீரங்கி அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்
படுகிறது.சீனாவிடமும், இந்த பீரங்கிக்கு நிகரான, டி - 95 என்ற பீரங்கி உள்ளது. அதை சீனா களமிறக்கினால், பதிலடி கொடுக்கவே, பீஷ்மாவை களமிறக்கியதாக, ராணுவம் கூறியுள்ளது.
பீஷ்மாவின் முக்கிய அம்சங்கள்
* அதிக அளவு ஆயுதங்கள் ஏந்தி செல்லும், நம் ராணுவத்தின் முக்கிய பீரங்கி
* உயிரி ஆயுதங்கள் மற்றும் ரசாயன ஆயுதங்களை எதிர்கொள்ளும்
* ஒரு நிமிடத்தில், எட்டு முறை சுடும் திறனுள்ளது
* இந்த பீரங்கியில் இருந்து, 6 கி.மீ., துாரம் வரை, ஏவுகணைகளை செலுத்த முடியும்
* உலகிலேயே மிகவும் எடை குறைந்தது. இதன் எடை, 48 டன்
* பகலிலும், இரவிலும் இயக்க முடியும்
* ஏவுகணை தாக்குதலை சமாளிக்கும் திறன் உள்ளது
* இந்த பீரங்கி, 1,000 குதிரை சக்தி கொண்ட இன்ஜின் கொண்டது
* மணிக்கு, 72 கி.மீ., வேகத்தில் இயங்கும்
* ஒரே நேரத்தில், 550 கி.மீ., தொலைவுக்கு இயக்க முடியும்.
* உலகிலேயே மிகவும் வலுவான, தகர்க்க முடியாத பீரங்கி
* சீனாவை விட, நம் ராணுவத்திடம் அதிக பீரங்கிகள் உள்ளன. சீனாவிடம், 3,500 பீரங்கிகளும், நம் ராணுவத்திடம், 4,292 பீரங்கிகளும் உள்ளன.


AthibAn Tv