Type Here to Get Search Results !

நேபாள அரசை கண்டித்து மாணவர்கள், மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்

Protests, Nepal, KP_Oli, Alleged, Inefficacy, Handling, COVID-19, Chinese,  Interference, நேபாளம், அரசு, எதிராக, போராட்டம், coronavirus, coronavirus outbreak, corona, covid-19 pandemic, corona  in nepal,Protests in Nepal, KP Oli-led regime

சீன குறுக்கீடு, கொரோனா தொற்று பாதிப்பை மோசமாக கையாண்டு வரும் நேபாள அரசை கண்டித்து மாணவர்கள், மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சொந்தமான காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வரும் நேபாள அரசு, புதிய அதிகாரப்பூர்வ வரைபட மசோதாவிற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதனிடையே நேபாளத்தில் அதிகரித்து வரும் ஊழல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். ஊழல் பிரச்னையை மறைக்க இந்தியாவுடன் எல்லை பிரச்னையை கையில் எடுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நேபாள அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நேற்று (ஜூன் 21) டார்ச்சுலா என்னுமிடத்தில் திரண்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேபாளத்தின் உள்நாட்டு விவகாரங்களில் சீன அரசு தலையீடுவதாகவும், பிரதமர் கே.பி.ஒலி சீன அரசின் கைப்பாவையாக மாறிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினார். கடந்த வாரம் தலைநகர் காத்மண்டுவில் திரண்ட மாணவர்கள், கொரோனா தொற்றை கையாள்வதில் திறமையின்றி செயல்படும் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

ஜூன் 17ம் தேதி நேபாள போலீஸ் தலைமை அதிகாரி ஷைலேந்திர தாபா, இந்திய - நேபாள எல்லையில் ஆய்வு செய்தார். இந்தியா உடனான எல்லை பிரச்னைக்கு பின் , நேபாள ராணுவ தளபதி புரான் சிங் தாபா, காலாபாணி அருகே உள்ள பகுதிக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது, மேலும் டம்லிங், டர்ச்சுலா, லகம், லாலி, மல்லிகார்ஜுன், மற்றும் ஜவுல்ஜிபி உள்ளிட்ட 6 இடங்களில் புதிய எல்லை காவல் படைகள் அமைக்க நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.