Type Here to Get Search Results !

கண்ணாடி விரியன் பாம்பு, அடுத்தடுத்து 35 குட்டிகள் உடனான அதிர்ச்சி வீடியோ

latest tamil news

கோவையில் பிடிபட்ட, அதிக நச்சுத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு, அடுத்தடுத்து 35 குட்டிகளை ஈன்றதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை கோவில்மேடு திலகர் வீதியில் வசிப்பவர் மனோகரன். இன்று அவரது வீட்டின் குளியலறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததைக் கண்டார். பாம்பு பிடிக்கும் முரளி என்பவருக்கு தகவல் அளித்துள்ளார்.அங்கு சென்ற முரளி, குளியல் அறையின் ஒரு மூலையில் இருந்த பாம்பை மீட்டு, தனது பையினுள் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளார். பின்னர் அதை வனப்பகுதிக்குள் விட கொண்டு சென்ற போது, அப்பாம்பு தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுக்க துவங்கியுள்ளது. அதிர்ச்சியடைந்த முரளி, அந்த பையை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளார்.

தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுத்த பாம்பு, சுமார் இரண்டு மணி நேரத்தில் 35 குட்டிகளை ஈன்றுள்ளது. பாம்பையும் குட்டிகளையும் வனத்துறையினரின் ஆலோசனைப்படி, சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட இருப்பதாக முரளி தெரிவித்துள்ளார்.

அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த கண்ணாடி விரியன் குட்டிகளை ஈன்றெடுக்கும் வகையைச் சேர்ந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.