Type Here to Get Search Results !

சோனியா, ராகுல், பிரியங்காவை தனிமை முகாமில் வைக்க வேண்டும்: பாஜக எம்பி

Sonia, Rahul, Priyanka, BJP, MP, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Parvesh Verma, சோனியா, ராகுல், பிரியங்கா, பாஜ, எம்பி, தனிமைமுகாம்

கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை தடுக்க, சோனியா, ராகுல், பிரியங்காவை ஊரடங்கு முடியும் வரை தனிமை முகாமில் வைக்க வேண்டும் என டில்லி மேற்கு பாஜ., எம்பி., பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

டில்லி மேற்கு பாஜ., எம்பி., பர்வேஷ் வர்மா செய்தியாளர்களுக்கு காணொலி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, காங்., இடைக்கால தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் மத்திய அரசின் பணிகளில் தவறு கண்டுபிடித்து, மக்களை பதற்றப்படுத்தும் வகையில் ஊரடங்கு தோல்வி என பேசி வருகிறார்கள்.

ஏற்கனவே பல்வேறு சவால்களை சந்தித்து வரும் மக்கள், இவர்களின் பேச்சால், மேலும் பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள். இதுபோன்று மக்களை பதற்றப்படுத்தும் பேச்சுக்களை தடுப்பதற்காக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரையும் தனிமை முகாமில் ஊரடங்கு முடியும் வைக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.