நேபாளத்தின் கூர்க்கா படைகளுக்கு முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம் நேரம் வரும் போது பதில் அளிக்க தயாராக இருக்கும் என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போகரல் தெரிவித்து உள்ளார்.
லிபுலேக்,கலாபானி, மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் குறித்து கடந்த சில தினங்களாக இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. நேபாளத்தின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே இந்தியராணுவ தளபதி எம்.எம். நாரவனே நேபாளம் வேறொருவரின் சார்பாக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக இருந்து வருகிறது என குறிப்பிட்டார்.
இந்திய தளபதியின் கருத்து குறித்து நேபாள நாட்டு ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போக்ரெல் கூறி இருப்பதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்காக நேபாள ராணுவம் பல தியாகங்களை செய்துள்ளது. எங்களின் உணர்வுகளை இந்திய தளபதி கேலி செய்து வருகிறார். கூர்க்கா படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம். நேரம் வரும் போது எங்களின் ராணுவம் பதில் அளிக்க தயாராக இருக்கும்.
நேபாள ராணுவம் எப்போதும் அரசியலமைப்பிற்கும் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கும் ஏற்ப போராட தயாராக உள்ளது. இருப்பினும் கலபான உள்ளிட்ட பகுதிகள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண ராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என கூறி உள்ளார்.


AthibAn Tv