Type Here to Get Search Results !

'ஸ்டப்' ஊடக நிறுவனத்தை தலைமை செயல் அதிகாரிக்கு, ஒரு டாலருக்கு விற்றுள்ளனர்.

Stuff sold for $1 to CEO Sinead Boucher by Nine Entertainment

நியூசிலாந்திலுள்ள மிகப்பெரிய ஊடக நிறுவனத்தை, அதன் உரிமையாளர்கள், அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் தலைமை செயல் அதிகாரிக்கு, ஒரு டாலருக்கு விற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள, 'நைன் என்டர்டெய்மென்ட்' நிறுவனத்துக்கு சொந்தமானது, 'ஸ்டப்' எனும் நிறுவனம். ஸ்டப் பல்வேறு தினசரி பத்திரிகைகளையும் இணையதளத்தையும் நடத்தி வருகிறது. ஸ்டப் நிறுவனத்தில், 400 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட, 900 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

கொரோனா பாதிப்புக்கு முன்னதாகவே, இந்நிறுவனத்தின் வருவாய் குறைந்து வந்த நிலையில், கொரோனா காலத்தில் அதன் விளம்பர வருவாயும் சுத்தமாக நின்று போனது. இந்நிலையில், ஆஸ்திரேலிய பங்குச் சந்தைக்கு, ஸ்டப் விற்பனை குறித்த தகவலை, 'நைன் என்டர்டெய்மென்ட்' நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், ஸ்டப் நிறுவனத்தை, அதன் தலைமை செயல் அதிகாரியான, சினேட் பவுச்சருக்கு விற்பனை செய்ய இருப்பதாகவும்; அதற்கான நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் நிறைவு பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

'ஸ்டப் நிறுவனத்தை, உள்ளூர்காரர்களே வைத்திருப்பது அதன் ஊழியர்கள், வாடிக்கையாளார்களுக்கு பலன் தருவதாக இருக்கும். நிறுவனத்தின் ஊழியர்கள் அதன் பங்குதாரர்களாக இருந்து செயல்படுவர்' என, சினேட் பவுச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அச்சகத்தை பொறுத்தவரை, அது, 'நைன் என்டெர்டெய்மென்ட்' வசமே இருக்கும் என்றும், அது, ஸ்டப் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.