
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, இரு நாடுகளை சேர்ந்த மூத்த ராணுவ தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கிழக்கு லடாக்கில் நிலவி வரும் பதற்றத்தை குறைக்க, இச்சந்திப்பு லடாக்கில் மே 22 மற்றும் 23 தேதியில் நடந்துள்ளது. டில்லி மற்றும் பீஜிங்கில் அமைதி தீர்மானத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலை பற்றி படிக்க : மீண்டும் ஒரு இந்து சாது படுகொலை | Once again a Hindu Sadhu massacre
லடாக்கில் உள்ள பங்கோங் தசோ ஏரி மற்றும் கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா இடையே ராணுவ பதற்றம் குறையவில்லை. இரு நாட்டு ராணுவ தளபதிகள் லடாக்கில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நியைில், இந்த பிரச்னையை சமாளிக்க இரு நாட்டு தலைநகரங்களிலும் ராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா அமைதியை விரும்பிய போதும், நாட்டின் நிலப்பரப்பை பாதுகாக்க, எல்லையில் சமரசம் செய்து கொள்ளாது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கு இடையில் 5 சுற்றுகளாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், எல்லையில் ராணுவ பதற்றம் குறையவில்லை. மே 5ம் தேதி, இரு நாடுகளின் படையினருக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, எல்லையில் ராணுவ பலத்தை இரு நாடுகளும் அதிகரித்து வருகின்றன. சுமூகமான தீர்வு ஏற்படும் வரை, ராணுவ தளபதிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மே 5ம் தேதி சுமார் 250 இந்திய மற்றும் சீன வீரர்கள் இரும்பு கம்பிகள் மற்றும் தடியடிகளுடன் மோதினர். இதில் இருபுறமும் பல வீரர்கள் காயமடைந்தனர். லடாக்கில் உள்ள கால்வன் நதி பகுதியில், இந்தியா சாலை அமைப்பதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது அந்த சாலையின் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


AthibAn Tv