
ஆப்கானிஸ்தானில், 'தலிபான்கள் போர் நிறுத்தம் அறிவித்ததை தொடர்ந்து, பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, 900 கைதிகள் விடுவிக்கப்படுவர்' என, நேற்று அரசு அறிவித்துள்ளது.
கொலை பற்றி படிக்க : மீண்டும் ஒரு இந்து சாது படுகொலை | Once again a Hindu Sadhu massacre
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், அமைதியை ஏற்படுத்த, அமெரிக்க பாதுகாப்பு படையினருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே, பிப்., 29ல், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, சிறையில் உள்ள, 5,000 தலிபான் கைதிகளை, அரசு விடுவிக்கும் நிலையில், தலிபான்களிடம் சிக்கியுள்ள, அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர், 1,000 பேரை விடுவிப்பது என, முடிவு செய்யப்பட்டது.
ஆனால், காபூலில் நிலவிய அரசியல் ரீதியிலான பிரச்னைகள் மற்றும் தலிபான்களை விடுவிப்பதில் தாமதம் காரணமாக, இந்த ஒப்பந்தத்தில் முன்னேற்றம் காணாமல் இருந்தது.இதற்கிடையே, முஸ்லிம்களின் ரமலான் பண்டிகையை தொடர்ந்து, தலிபான்கள் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். போர் நிறுத்தம், நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், 'தலிபான் அமைப்பைச் சேர்ந்த, 900 கைதிகள் விடுவிக்கப்படுவர்' என, ஆப்கன் அரசு அறிவித்து உள்ளது.
அத்துடன், 'தலிபான்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும்' என, தேசிய பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர், ஜாவித் பைசல் வலியுறுத்திஉள்ளார்.கைதிகளை விடுவிப்பதால் வன்முறைகள் குறையும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், 'போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என, தலிபான் அமைப்பின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.


AthibAn Tv