
இந்தியாவின் தங்க இறக்குமதி, தொடர்ந்து, ஐந்தாவது மாதமாக, ஏப்ரலிலும் கிட்டத்தட்ட, 100 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டு உள்ளது.
நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில், தங்கத்தின் இறக்குமதி, 21.37 கோடி ரூபாய் அளவுக்கே நடைபெற்றுள்ளது. அதாவது கிட்டத்தட்ட, 100 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது.கடந்த ஆண்டு, இதே ஏப்ரல் மாதத்தில், 29 ஆயிரத்து, 974 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் இறக்குமதி குறைந்தாலும், ஒருவகையில், அது நாட்டின் வர்த்தக பற்றாக்குறை இடைவெளியை பெருமளவு குறைத்துள்ளது.ஏப்ரல் மாதத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 51 ஆயிரத்து, 340 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 1.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இந்தியாவின் தங்க இறக்குமதி, கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தொடர்ந்து சரிந்து வந்துள்ளது. உலகளவில் தங்க இறக்குமதியில் முன்னணி வகிக்கும் நாடு, இந்தியாவாகும். ஆண்டு ஒன்றுக்கு, 800லிருந்து, 900 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.
தங்கம் மட்டுமின்றி, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் ஏற்றுமதியும் ஏப்ரலில் சரிந்துள்ளது. இத்துறை, 98.74 சதவீதம் சரிவைக் கண்டு, 271 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி ஆகியுள்ளது.


AthibAn Tv