
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து 329 பேர் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா விமானம் மூலம் பெங்களூருக்கு வந்தனர்.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவி அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்புகள் தொடர்பான அச்சுறுத்தல்களால் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் தாங்கள் சொந்த ஊர் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூதரகம் மூலமாகவும், பிற வழிகள் மூலமாகவும் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் அரசு, வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா போன்ற விமான நிறுவனங்கள் மூலமும் கடற்படை மூலமாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பணக்கார நாடு தமிழ்நாடு மட்டுமே....! Tamil Nadu is the richest country ....!
தொடர்ந்து, இதற்காக வந்தே பாரத் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அரசு களமிறங்கியது. இதன் கீழ் ஏர்-இந்தியா விமானம் மூலமாக அமெரிக்காவிலிருந்து நாட்டு மக்களை திரும்ப அழைத்து வருவதற்காக ஏழு விமானங்களை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டி.சி, சிகாகோ மற்றும் நியூயார்க் ஆகிய நாடுகளிலிருந்து விமானங்கள் பயணிகளுக்கான சேவையில் ஈடுபடும் என கூறப்படுகிறது. இரண்டாம் கட்டமாக இந்த 7 விமானங்களில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து 2, சிகாகோவில் இருந்து 2, நியூயார்க்கில் இருந்து 2 மற்றும் வாஷிங்டனில் இருந்து 1 என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஜே.எப்.கே சர்வதேச விமான நிலையத்தில் (JFK International Airport) இருந்து 329 இந்தியர்கள் ( 2 கைக்குழந்தைகள் உட்பட) ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலமாக பெங்களூரு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் நேற்று நியூயார்க் நகரத்தில் இருந்து புறப்பட்டது. மேலும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் நியூயார்க் நகரத்தில் இருந்து வரும் நான்காவது விமானம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளை பரிசோதித்து, பாதுகாப்புடன் அனுப்ப வைக்கும் பணிகளில் நியூயார்க்கின் இந்திய தூதரக தலைவர் சந்தீப் சக்கரவர்த்தி மற்றும் துணை தலைவர் சத்ருகன் சின்ஹா உடன் இருந்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


AthibAn Tv