Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45, 380 ஆக அதிகரித்துள்ளது



இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45, 380 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 4,167 பேர் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,536 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 146 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று( மே.,26) காலை 9:30 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,38, 845 ல் இருந்து 1,45, 380 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,021 ல் இருந்து 4,167 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,721 ல் இருந்து 60, 491 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 80, 722 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,535 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 146 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

மஹாராஷ்டிரா - 52667

தமிழகம் -17,082

குஜராத் -14,460

டில்லி - 15,053

ராஜஸ்தான் - 7,300

ஆந்திரா - 3,110

தெலுங்கானா-1,920

கர்நாடகா-2,182

கேரளா-896

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.