Type Here to Get Search Results !

ஜெயலலிதா தீவிர இந்துத்துவாவாதி என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.... அண்ணாமலை அதிரடி

 தமிழகத்தில் பா.ஜ., தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசியவர்,

2024ல் பாஜக தனித்து 370 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களையும் கைப்பற்றும் என்றும் கூறிய அவர், “மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி” என்றார். குறிப்பாக, “அனைத்து மாநிலங்களிலும் இந்த முறை பாஜக தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கும்” என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசியவர், தமிழில் முதலில் மும்முனைப் போட்டி, பின்னர் இருமுனைப் போட்டியாக மாறியது என்றும், "தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்" என்றும் கூறினார்.

“ஜெயலலிதா தீவிர இந்துத்துவாவாதி என்பதற்கு பல சான்றுகள் உள்ளன” என்று கூறிய அண்ணாமலை, “இது குறித்து அதிமுகவுடன் விவாதிக்க தயார்” என்றார். "முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிரானவன் அல்ல" என்றும், "மத அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது" என்றும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து அண்ணாமலை பேசுகையில், ''கருத்து உரிமையை நசுக்கி, கைது செய்யக்கூடிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டணியில் இருந்து கருத்து உரிமை குறித்து திருமாவளவன் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

“நடிகர் பிரகாஷ்ராஜின் குரலுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என்று கூறிய அண்ணாமலை, “காமராஜர் ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியுடன் ஒப்பிட்டு, செல்வப்பெருந்தகையை அவதூறாகப் பேசினார்” என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.