Type Here to Get Search Results !

ஒரே நாடு ஒரே தேர்தல் அடுத்த 5 ஆண்டுகளில் திட்டம் கொண்டுவரப்படும்... ராஜ்நாத் சிங்

  “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் குஷி நகரில் மக்களவை பாஜக வேட்பாளர் விஜய் குமார் துபேயை ஆதரித்து பிரச்சாரம் செய்த ராஜ்நாத் சிங், இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதாகவும், 2027-ல் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என்றும், பாஜக அரசு இப்படியே தொடர்ந்தால், 2070-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் உறுதிபடக் கூறினார்.

அடிக்கடி தேர்தல் நடத்துவது நாட்டுக்கு நல்லதல்ல என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.