
இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டத்தை கண்டித்து முன்னாள் ராணுவத்தினர் சீன தூதரகம் முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து கூறப்படுவதாவது: லடாக் பகுதியில் இந்திய சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் தலைநகர் புதுடில்லியில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு ஒன்று கூடி சீனாவின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். சமூக இடைவெளியை கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர் என போலீசார் கூறினா்.
மேலும் சுதேசி ஜாகரன் மன்ச்-சை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சீனாவின் நடவடிக்கையை கண்டித்து தீன் மூர்த்தி பவன் அருகில் ஒன்று கூடினர் எனவும் அவர்கள் அப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டனர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.


AthibAn Tv