ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து பாடிய வந்தேமாதரம் ஆல்பம் உலக புகழ்பெற்றது. இப்போது கேட்டாலும் ரத்தத்தில் தேசப்பற்றை ஊர வைக்கும் பாடல். இதேபோன்று தமிழ்தாய் வாழ்த்துக்கும் ஒரு ஆல்பத்தை ரஹ்மான் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருகிறது. ரஹ்மான் உருவாக்கிய செம்மொழி ஆல்பம் இதற்கான ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
இந்த ஆல்பம் உருவாக்கும் முயற்சியில் கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து இறங்குகிறார்கள். இதற்கான பாடலை எழுதி, ஆல்பத்தை கமல் இயக்க உள்ளார். ரஹ்மான் இசை அமைத்து பாடுகிறார்.
இதுகுறித்து கமல் கூறியதாவது: ஒரு ஆண்டுக்கு முன்பே இந்த யோசனையை ரஹ்மானிடம் சொல்லிவிட்டேன். அவரும் செய்யலாம் என்றார். அதற்கான நேரத்தை அவர் எடுத்துக் கொள்வார். படைப்பாளிளை வலிந்து வேலை வாங்க முடியாது. இது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்றார்.
ரஹ்மான் கூறும்போது: அப்படி ஒரு ஆசை எனக்கும் இருக்கிறது. அதை உடனடியாக செய்து விட முடியாது. அதற்கு நிறைய மெனக்கெட வேண்டும். கமலும் ஊக்கப்படுத்தி வருகிறார். நேரம் வரும்போது எல்லாம் தானாக அமையும் என்றார்.



AthibAn Tv