
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உ.பி., அரசு சிறப்பாக செயல்படுவதாக, பாகிஸ்தானை சேர்ந்த 'டவுன்' பத்திரிகையின் ஆசிரியர் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டவுன் பத்திரிக்கையின் ஆசிரியர் பாஹத் ஹுசைன் டுவிட்டரில், பாகிஸ்தான் மற்றும் உத்திர பிரதேசத்தின் கொரோனா கிராபின் படத்தை பகிர்ந்து பதிவிட்டதாவது: இந்த கிராப்பில், பாகிஸ்தான் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்கள். ஒப்பிடுகையில், பாகிஸ்தான் உத்திர பிரதேசம் ஏறக்குறைய ஒரே மக்கள் தொகை, கல்வியறிவை கொண்டவை. ஊரடங்கு நடவடிக்கையை உ.பி., அரசு கடுமையாக பின்பற்றியுள்ளது. நாம் அதை முறையாக பின்பற்றவில்லை.
Look at this graph carefully. It compares death rate of Pakistan and Indian state of UP. Both have roughly same population profile & literacy. Pakistan has lesser density/km and higher GDP/capita. UP was strict with lockdown. We were not. See diff in death rate #COVIDー19— Fahd Husain (@Fahdhusain) June 7, 2020
(1/2) pic.twitter.com/so8SgEtjCw
பாகிஸ்தானை விட உத்திர பிரதேசத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், சிறந்த உள்நாட்டு உற்பத்தியை கொண்ட மஹாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனாவால் பலியானவர்கள் அதிகம். எனவே உத்திர பிரதேசம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு சரியாக செய்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


AthibAn Tv