Type Here to Get Search Results !

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பயணம் செய்ய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு விமானங்கள்

ஏர் ஃபோர்ஸ் ஒன்-க்கு நிகரான ...

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பயணம் செய்ய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு விமானங்கள் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவால் வாங்கப்பட்ட இரண்டு B-777 ரக விமானங்கள் டெல்லாசில் உள்ள போயிங்க் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த இரண்டு விமானங்களிலும் ரூ 1,500 கோடி செலவில் வாங்கப்பட்ட அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்கள் பொருத்தப்பட உள்ளன. ஆபத்து காலங்களில் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு வசதி கொண்ட அறைகளும் இந்த விமானங்களில் அமைக்கப்படும்

இந்தியா வந்த பின் இந்த இரண்டு விமானங்களும் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும். தலைவர்கள் இந்த விமானங்களில் பயணம் செய்யும் போது அவற்றை போர் விமானிகள் இயக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.