Type Here to Get Search Results !

சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நிலவிய நீண்டகால பிரச்னையில் வென்றது ஜப்பான்

latest tamil news

ஒகினாவா சிட்டி கவுன்ஸில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நிலவிய நீண்டகால பிரச்னையை தீர்த்து வைத்துள்ளது.

சென்ககுஸ், டியாயுஸ் என்கிற சீனாவுக்கும் ஜப்பானுக்கு இடையே உள்ள சிறு தீவுத் தொடர்களில் மனிதர்கள் வசிப்பதில்லை. இவை தங்களுக்குத் தான் சொந்தம் என சீனாவும் ஜப்பானும் மோதிக்கொண்டன. இந்த வழக்கு ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள இஷிககி சிட்டி கவுன்சிலுக்குச் சென்றது.
டொனோஷிரோ என்ற தீவு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 1200 மைல் தொலைவில் உள்ளது. 1972ம் ஆண்டுமுதல் இந்த தீவு ஜப்பான் அரசு நிர்வகித்து வந்தது. ஆனால் இந்த தீவு உட்பட ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள சில தீவுகள் தங்களுக்குத் தான் சொந்தமென சீனா வாதாடியது. இதனை ஜப்பான் ஏற்க மறுத்தது.

தற்போது தீர்ப்பு ஜப்பானுக்கு சாதகமாக அமைந்து தீவுகள் அவர்களுக்குச் சொந்தமானதால் டோகியோவில் உள்ள சீன தூதரகத்தில் போராட்டம் நடைபெறுமென சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென் சீன கடலில் சீனா ராணுவ பயிற்சி மேற்கொள்வது அமெரிக்காவை எரிச்சல் அடையச் செய்துள்ள நிலையில் கிழக்கு சீன கடலில் இந்த தீவுகள் விவகாரம் சீனாமீது ஜப்பானுக்கு அதிருப்தி ஏற்படுத்தி வந்துள்ளது. இந்த ஆளில்லாத் தீவுகளைப் பிற்காலத்தில் ராணுவ பயிற்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் போட்டியிடுகின்றன என கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.