Type Here to Get Search Results !

ஆதிச்சநல்லுார், சிவகளை அகழாய்வில் புதிதாக மூன்று முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரில் தற்போது ...

துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுார், சிவகளையில் தாமிரபரணி ஆற்றின் கரைகளில் தமிழக தொல்லியல் துறையினர் மே 25 முதல் அகழாய்வு பணிகள் மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், சிவகளையில் தொல்லியல் அலுவலர்கள் பிரபாகரன், தங்கதுரை, காசிலிங்கம் ஆகியோரும்,
ஆதிச்சநல்லுாரில் தொல்லியல்அலுவலர்கள் பாஸ்கரன், லோகநாதன் ஆகியோரும் ஈடுபடுகின்றனர். இதில் ஆதிச்சநல்லுாரில் இன்று தோண்டப்பட்ட குழியில் ஒரு முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது.

ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வில் 3 ...

அதன் மேல்பாகம் சற்று உடைந்த நிலையிலும் அடிப்பாகம் நல்லநிலையிலும் உள்ளது. தாழிக்கு அருகில் இரண்டு மனித கை எலும்புகூடுகள் கண்டறியப்பட்டன.
சிவகளையிலும் இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து அகழாய்வுகள் செப்டம்பர் வரையிலும் நடக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.