Type Here to Get Search Results !

இந்திய-சீன எல்லை பிரச்னை தொடர்பாக லெப்டினட் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்திலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

 இந்திய எல்லை பகுதியில்ஒரு அங்குலம் ...

இந்திய-சீன எல்லை பிரச்னை தொடர்பாக லெப்டினட் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்திலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.

நம் அண்டை நாடான சீனா, எல்லை பிரச்னையில் நம்முடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது. சமீபத்தில், காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதில், சீன வீரர்கள் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். 'கல்வான் பள்ளதாக்கு, எங்களுக்கு சொந்தமானது' என, சீனா கூறி வருகிறது.

இந்நிலையில் பிரச்னையை தீர்க்க இரு நாட்டு ராணுவ லெப்டினட் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்திலான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில், நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கிழக்கு லடாக் பகுதியான சூஷூல் என்ற பகுதியில் காலை 11.30 மணிக்கு துவங்கியது. பேச்சுவார்த்தை தொடர்ந்து 12 மணி நேரமாக நீடித்து வருகிறது.
இதில் ஏப்ரலுக்கு முந்தைய நிலைப்பாடு தொடர வேண்டும். எல்லையில் அமைதிக்கான ஒப்பந்தத்தை சீனா மதிக்க வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து நாளையும் பேச்சுவார்த்தை தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.