
காங்கிரசுக்கு ராகுல் மீண்டும் தலைமையேற்க வேண்டும் என ராஜஸ்தான் துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான சச்சின் பைலட் வலியுறுத்தியுள்ளார்.
2019 லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதனை தொடர்ந்து கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். ஆனால், 'ராகுல் மீண்டும் தலைவர் பதவியில் தொடர வேண்டும்' என, கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். காங்கிரஸ் தலைவராக ராகுல் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும். இது எங்களுடைய வலியுறுத்தல். இவ்வாறு அவர் கூறினார்.


AthibAn Tv