
இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கைப்படி கொரோனாவைப் போக்கும் ரெம்டெஸிவர் மருந்து இந்த மாத இறுதிக்குள் இந்திய மருந்து கடைகளில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிலீட் சயுன்சஸ் என்ற நிறுவத்தின் தயாரிப்பு ரெம்டெஸிவர். இதனை கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்த மத்திய சுகாதாரத் துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி செயற்கை ஆக்ஸிஜன் உதவி வழங்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெஸிவர் மருந்தை மருத்துவர்கள் அளிக்கலாம். மிதமான கொரோனா தாக்கம் கொண்ட நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்தை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரெம்டெஸிவர் மருந்து சிகிச்சை இன்வெஸ்டிகேஷனல் தெரப்பி என அழைக்கப்படுகிறது. அதாவது பரிசோதனை முறையில் மட்டுமே இந்த மருந்து நோயாளியின் உடலில் பயன்படுத்தலாம். இது கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும் ஆற்றல் அற்றது. இது மட்டுமல்லாமல் மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுவீன், அசித்ரோமைசின் உள்ளிட்ட மருந்துகளும் பரிசோதனை முயற்சியாகவே கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


AthibAn Tv