Type Here to Get Search Results !

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

அவினாசியில் பஸ் விபத்தில் 20 பேர் ...

பீகார் மற்றும் உத்திரபிரதேசத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பீகாரில் பெய்த கனமழையாலும், மின்னல் தாக்கியும் ஒரே நாளில் 83 பேர் பலியாகி உள்ளனர். உத்திரபிரதேசத்தில் பலர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: பீகார் மற்றும் உத்திரபிரதேசத்தில் சில மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்குதலில் சிக்கி பலர் உயிரிழந்த சோகமான செய்தி வந்துள்ளது. மாநில அரசுகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.