Type Here to Get Search Results !

ரஷ்யா சென்றுள்ள ராஜ்நாத் சிங் - சீன பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்

Rajnath Singh | 10-15 ஆண்டுகளில் இந்தியாவின் ...

 ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என சீன பத்திரிகை தெரிவித்த நிலையில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

லடாக்கில், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்திய - சீன மோதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 43 சீன வீரர்கள் பலியானதாக கூறப்பட்டுகிறது. இதனையடுத்து எல்லையில் பதற்றம் நிலவியது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், சுமூக தீர்வு எட்டப்பட்டு, இருநாட்டு படைகளும் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற்றுள்ளன.

இந்நிலையில் ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் வே பெங்கை, ரஷ்யாவில் சந்தித்து, எல்லை பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என ரஷ்ய பத்திரிகையான 'குளோபல் டைம்ஸ்' தெரிவித்திருந்தது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர், இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் சந்தித்து பேசும்படி, நிகழ்ச்சி நிரல் அமைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதை நினைவுகூறும் வகையில், மாஸ்கோவில் நாளை(ஜூன் 24) நடைபெறும் பேரணியில் இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.