
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டிவி மூலம் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட இடங்களில் அதிகரித்து வருகிறது. குறுகிய காலத்தில் நோய் தொற்று, குறைய வாய்ப்பு இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் 15ம் தேதி துவங்கவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வு மற்றும் 11ம் வகுப்புகளுக்கு விடுபட்ட தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
தேர்வு எழுதாமல், மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் மதிப்பெண்கள், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், வருகை பதிவேடு அடிப்படையில் 20 சதவீதமும்வழங்கப்படும். 12ம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வு குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


AthibAn Tv