
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதை விடுத்து அதை புறக்கணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. திடீரென லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சீன வீரர்கள் இந்திய படைகளின் மீது கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கினர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் வீரர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இந்திய எல்லை பகுதிகளில் சீனா தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. எல்லையில் நிலவும் பிரச்னைகள் குறித்து இருநாட்டு ராணுவ தலைவர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனால் லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. உள்நாட்டிலும் சீனாவிற்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர். தொடர்ந்து, பல்வேறு வர்த்தக அமைப்புகளும், சங்கங்களும், நாட்டில் பயன்பாட்டில் உள்ள சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. இதுதொடர்பாக சமூக வலை தளங்களிலும் சில ஹாஷ்டேகுகள் ட்ரண்டாகி வருகிறது.
இதுகுறித்து, இன்று (ஜூன் 18) மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், மக்கள் அனைவரும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அத்துடன் அன்றாடம் பயன்படுத்தும் சீன அரசின் தயாரிப்புகளை நிறுத்த வேண்டும். தற்போது சைனீஸ் உணவுகளை விரும்பி உண்கின்றனர். அதனை தவிர்க்க வேண்டும். சீன பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது மத்திய அரசு, பிஐஎஸ் தர விதிகளை விதிக்க உள்ளது. இந்த விதியின் கீழ் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மாதிரியாக 25 விதிமுறைகள் இருக்கின்றன. நம் நாட்டில் இருந்துசீனாவிற்கு அனுப்பப்படும் சிறந்த மற்றும் தரமான பொருட்களையும் சீன அரசு பரிசோதித்து தரமில்லை என குற்றம்சாட்டுகிறது. இவ்வாறு கூறினார்.


AthibAn Tv