.jpg)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு தற்போது ரெம்டெசிவர் போன்ற மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இம்மருந்து தவிர 'டோசிலிசுமாப்' என்ற மருந்தும் வெளிநாடுகளில் கொரோனா சிகிச்சையின் போது பரிந்துரை செய்யப்படுகிறது.
'டோசிலிசுமாப்' என்ற மருந்து அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகளை தடுப்பதில் நல்ல பலன் தந்துள்ளது. இதனால் தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவக்குழுவின் பரிந்துரையின் படி டோசிலிசுமாப் (Tocilizumab) தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த முதற்கட்டமாக 100 மருந்து பாட்டில்கள் அமெரிக்காவிலிருந்து தற்போது வரவழைக்கப்பட்டுள்ளது. ஐ.வி., மூலம் செலுத்தப்படும் இந்த மருந்தின் விலை ரூ 50,000 முதல் ரூ 1 லட்சம் வரை ஆகும்.
சென்னையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் சோதனை முறையில் பயன்படுத்த டோசிலிசுமாப் மருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


AthibAn Tv