Type Here to Get Search Results !

இந்திய சீன எல்லைப் பகுதியில் ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆயுதங்களை எடுத்செல்லக் கூடாது : பீஜிங் ராணுவ நிபுணர்

Home

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்டு வரும் சமீபத்திய மோதல்கள் சமாதானமாகும் என்று இரு தரப்பிலும் நம்பப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமையன்று நடந்த மோதலில் இந்தியாவில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இருந்தாலும் இதற்கு முந்தைய காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே நடந்த மோதல்களின் போது இறுதியில் சமாதான போக்கே நிலவியது. இரு நாடுகளும் அந்த மன நிலையில் தான் உள்ளன.

இந்திய சீன எல்லைப் பகுதியில் ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆயுதங்களை எடுத்செல்லக் கூடாது என்ற தெளிவான புரிதலை இரு நாடுகளும் கொண்டுள்ளன. இது மோதலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இது சீனாவும் இந்தியாவும் தெளிவான மரபு கொள்கையை வைத்திருப்பதையே காட்டுகிறது. மோதல் ஏற்பட்டாலும் சிறிய அளவிலும் அது கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சீனாவும் இந்தியாவும் தங்களுக்கு இடையேயான ராஜ்ய பிரச்னைகளை தீர்ப்பதில் நெருக்க மான தொடர்பில் உள்ளன என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் புதன்கிழமையன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:திங்களன்று நடந்த மோதல் சம்பவத்தில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு சீனா பொறுப்பில்லை. இந்தியா மேலும் துணிந்தால் எதிர்காலத்தில் அதிக விலை கொடுக்க வேண்டும். சீனாவை கட்டுப்படுத்தும் வாய்ப்பாக அமெரிக்கா இப்பிரச்னையை கையாள்கிறது. எல்லைப் பிரச்னையிலும் சீனாவை இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்த அமெரிக்காவுக்கு வாய்ப்பாக அமைகிறது. எனினும் இந்தியா தன் சொந்த நலன்களை கருத்தில் கொண்டு இக்கட்டான சூழலில் அமைதி ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்' இவ்வாறு கூறினார். இந்நிலையில் இரு நாடுகளின் துருப்புகளும் கடந்த புதனன்று வெளியேறியதாக ராய்டர்ஸ் நிறுவனம் கடந்த புதனன்றே செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் டேங்க் கிராண்ட் வியூ நிறுவனத்தின் துணைத்தலைவர் டியான் ஷிசன் புதனன்று குளோபல் டைமஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ' இனி வரும் நாட்களில் இரு நாடுகளுக்கு இடையேயான போக்கு குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறேன். சீனாவும் இந்தியாவும் அணு ஆயதங்களை வைத்துள்ள நாடுகள். இரு நாடுகளும் சமாதானமாக வேண்டும். இல்லையென்றால் போர் ஏற்படும் பட்சத்தில் அதிக உயரிழப்புகள் ஏற்படும். இரு நாடுகளும் எல்லைப் பிரச்னையை தீர்த்து, உறுதியான போக்கை கடைபிடித்தால் அமைதிக்கு வழிவகுக்கும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பீஜிங் ராணுவ நிபுணர் வி டோங்சு குளோபல் டைம்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ' சீன வீரர்கள் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக உறுதியான தாக்குதல் நடத்திய போதும் சீனா இன்னும் தீவிரமான தாக்குதலை ஆரம்பிக்கவில்லை, இரு தரப்பிலும் தாக்குதலை கட்டுப் படுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே விரும்புகிறோம். மோதல் தீவிரமானால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தியாவும் உணர்ந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மோதல் படிப்படியாக குறையும் என்று நம்புகிறேன்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.