Type Here to Get Search Results !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 33,298, இதுவரை உயிரிழப்பு 286



தமிழகத்தில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,520. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 42.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக இன்று மட்டும் 1,149 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மேலும் 17 பேர் (தனியார் மருத்துவமனை -3, அரசு மருத்துவமனை -14) பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இன்று ஒரேநாளில் 528 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 17,527 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 15,413 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 14,982 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 6,07,952 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 77 (அரசு 44 + தனியார் 33) பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.