
வீரமரணம் அடைந்த 20 ராணுவ விரர்களை இழந்த வேதனையை வார்த்கைகளால் விளக்க முடியவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சிறந்த ராணுவ வீரர்களை இழந்த, அவர்களின் குடும்பத்தை வணங்குகிறேன். அவர்களின் உயிர் தியாகத்திற்கு, இந்தியா எப்போதும் கடன் பட்டிருக்கும். முழு தேசமும், பிரதமர் மோடியின் அரசும், அவர்களின் குடும்பத்துக்கு உறுதுணையாக நிற்கும். காயமடைந்தவர்கள் விரைவில் மீள, கடவுளிடம் வேண்டுகிறேன்.
வீரமரணம் அடைந்து உயிர்தியாகம் செய்த துணிச்சலான எங்கள் ராணுவ வீரர்களை இழந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


AthibAn Tv