Type Here to Get Search Results !

இந்தியாவில் ஒரே நாளில் 14,933 பேருக்கு கொரோனா: 312 பேர் பலி



இந்தியாவில் நேற்று (ஜூன் 22) ஒரே நாளில் 14,933 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.4 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14 ஆயிரத்தை கடந்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 14,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 014 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 48 ஆயிரத்து 190 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 312 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 011 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

மாநிலம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- பலி
மஹாராஷ்டிரா - 1,35,796 - 6,283
டில்லி - 62,655 - 2,233
தமிழகம் -52,087 - 794
குஜராத்- 27,825 -1,684
உ.பி.,-17,322-569
ராஜஸ்தான்-15,232-356
மேற்கு வங்கம்- 14,358-569
ம.பி.,-12,078-521
ஹரியானா-11,025-169
கர்நாடகா-9,399- 142
ஆந்திரா 9,372-111
தெலுங்கானா-8,674-217
பீஹார்-7,825-55
காஷ்மீர்-6,088-85
அசாம்-5,586-09
ஒடிசா-5,303-15
பஞ்சாப் 4,235-101
கேரளா-3,310-21
உத்தர்காண்ட்-2,402-28
சத்தீஸ்கர்-2,303-12
ஜார்க்கண்ட்-2,137-11
திரிபுரா-1,237-01
மணிப்பூர்-89-0
கோவா-764-1
லடாக்-847-01
ஹிமாச்சல பிரதேசம்-727-08
சண்டிகர்-411-06
புதுச்சேரி-383-08
நாகலாந்து-280-0
மிசோரம்-141-0
அருணாச்சல பிரதேசம் - 139- 0

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.