Type Here to Get Search Results !

சீனாவின் பீஜிங்கில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Toll From Outbreak Climbs in China as Infections Reach Europe and ...

சீனாவின் பீஜிங்கில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சந்தைகள் மூடப்பட்டன.

சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா இன்று உலக நாடுகளை கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தது.

இந்நிலையில் புதிதாக 12 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன. அதில் 6 தொற்றுகள் பீஜிங்கில் கண்டறியப்பட்டன. இதையடுத்து நகரில் உள்ள மொத்த விற்பனை சந்தை ஷின்பாடி உட்பட அனைத்து சந்தைகளும் மூடப்பட்டன. பீஜிங்கில் புதிதாக இறக்குமதியான சாலமன் மீனில் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் கடைக்காரர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சந்தையில் வைரஸ் கண்டறியப்பட்டதால் தொடர்புடைய 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பீஜிங் நகரின் ஷின்பாடி சந்தையின் அருகே 11 குடியிருப்புகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று புதிதாக ஆரம்பித்தவுடனே பீஜிங்கில் உள்ள அனைத்து மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி சந்தைகள் மூடப்பட்டுவிட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.