Type Here to Get Search Results !

இந்தியாவில் ஒரே நாளில் 12,881 பேருக்கு கொரோனா: 334 பேர் பலி



இந்தியாவில் நேற்று(ஜூன் 17) ஒரே நாளில் ஒரே நாளில் 12,881 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.6 லட்சமாக அதிகரித்தது. உயிரிழப்பு 12,237 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 12,881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 328 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 334 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

மாநிலம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- பலி
மஹாராஷ்டிரா - 1,16,752 - 5,651

தமிழகம்- 50,193 - 576

டில்லி -47,102-1,904

குஜராத்-25,093-1,560

உ.பி.,--14,598-435

ராஜஸ்தான்-13,542-313

மேற்கு வங்கம்- 12,300-506

ம.பி.,-11,244-482

ஹரியானா-8,832-130

கர்நாடகா-7,734-102

ஆந்திரா 7,071-90

பீஹார்-6,942-44

தெலுங்கானா-5,675-192

காஷ்மீர்-5,406-65

அசாம்-4,605-08

ஒடிசா-4,338-11

பஞ்சாப் 3,197-72

கேரளா-2,697-20

உத்தர்காண்ட்-2,023-26

ஜார்க்கண்ட்-1,895-10

சத்தீஸ்கர்-1,864-10

திரிபுரா-1,135-01

லடாக்-687-01

கோவா-656-0

ஹிமாச்சல பிரதேசம்-56908

மணிப்பூர்-552-0

சண்டிகர்-358-06

புதுச்சேரி-245-07

நாகலாந்து-193-0

மிசோரம்-121-0

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.