Type Here to Get Search Results !

இந்தியாவில் ஒரே நாளில் 11,929 பேருக்கு கொரோனா பலி 9,195 ஆக அதிகரிப்பு



இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,929 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.2 லட்சமாக அதிகரித்தது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 9,195 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 11,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 379 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 311 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 195 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்


மாநிலம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- பலி
மஹாராஷ்டிரா - 1,04,568- 3,830

தமிழகம்- 42,687-397

டில்லி -38,958-1,271

குஜராத்-23,038-1,448

உ.பி.,-13,118-385

ராஜஸ்தான்-12,401-282

மேற்கு வங்கம்- 10,698-463

ம.பி.,-10,641-447

கர்நாடகா-6,824-81

ஹரியானா-6,749-78

பீஹார்-6,290-39

ஆந்திரா -5,965-82

காஷ்மீர்-4,878-55

தெலுங்கானா-4,737-182

ஒடிசா-3,723-10

அசாம்-3,718-08

பஞ்சாப் 3,063-65

கேரளா-2,407-19

உத்தர்காண்ட்-1,785-23

ஜார்க்கண்ட்-1,711-08

சத்தீஸ்கர்-1,512-06

திரிபுரா-1,046-01

கோவா-523-0

ஹிமாச்சல பிரதேசம்-502-6

மணிப்பூர்-449-0

லடாக்-437-01

சண்டிகர்-345-05

புதுச்சேரி-176-2

நாகலாந்து-163-09

மிசோரம்-107-0

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.